10 சோவார்+ வரையுள்ள யோர்தான் பிரதேசம் முழுவதையும் லோத்து பார்த்தார்.+ அது நிறைய தண்ணீர் உள்ள இடமாக இருந்தது. (சோதோமையும் கொமோராவையும் யெகோவா அழிப்பதற்கு முன்பு அது அப்படி இருந்தது.) யெகோவாவின் தோட்டத்தைப் போலவும்+ எகிப்து தேசத்தைப் போலவும் அது இருந்தது.
12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தார். ஆனால் லோத்து, யோர்தான் பிரதேசத்தில் இருந்த நகரங்களில் குடியிருந்தார்.+ கடைசியாக, அவர் சோதோமுக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டார்.