19 அதற்குக் கடவுள், “உன் மனைவி சாராள் கண்டிப்பாக உனக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுப்பாள். அவனுக்கு நீ ஈசாக்கு*+ என்று பெயர் வைக்க வேண்டும். என்னுடைய ஒப்பந்தத்தை அவனுக்கும் அவனுடைய வருங்காலச் சந்ததிக்கும் நிரந்தர ஒப்பந்தமாக உறுதிப்படுத்துவேன்.+
7 அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாரும் உண்மையில் அவருடைய பிள்ளைகளும் கிடையாது.+ ஆனால், “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்”+ என்று அவருக்குச் சொல்லப்பட்டது.