16 ஏனென்றால், விவாகரத்தை நான் வெறுக்கிறேன்”+ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார். “வன்முறையில் ஈடுபடுகிறவனையும் நான் வெறுக்கிறேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். துரோகம் செய்யாதீர்கள்.+
5 ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்’+ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா?
7 இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுப் பிரிந்திருப்பான்;+8 அவனும் அவன் மனைவியும்* ஒரே உடலாக* இருப்பார்கள்.’ இப்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள்.+
2 உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் சட்டப்படி அவனோடு இணைக்கப்பட்டிருப்பாள். கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்படுவாள்.+
16 விபச்சாரியோடு சேர்ந்திருக்கிறவன் அவளோடு ஒரே உடலாக இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், “அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.+