-
ஆதியாகமம் 36:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 பின்பு, ஏசா தன்னுடைய மனைவிகளையும் மகன்களையும் மகள்களையும் தன்னுடைய வீட்டிலிருந்த எல்லாரையும் கூட்டிக்கொண்டு, தன்னுடைய தம்பி யாக்கோபைவிட்டுத் தூரமாக வேறொரு தேசத்துக்குப் போனார்.+ அப்போது, தன்னுடைய ஆடுமாடுகளையும் மற்ற எல்லா கால்நடைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்தில் தான் சம்பாதித்திருந்த சொத்துகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்.+ 7 ஏனென்றால், ஏசாவும் யாக்கோபும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாதளவுக்கு அவர்களுடைய உடைமைகள் ஏராளமாகப் பெருகியிருந்தன. அதோடு, அவர்கள் குடியிருந்த தேசத்தில் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதுமான இடம் இருக்கவில்லை.
-