-
யாத்திராகமம் 25:17-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும் சுத்தமான தங்கத்தால் ஒரு மூடி செய்ய வேண்டும்.+ 18 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்ய வேண்டும். அவை மூடியின் இரண்டு முனைகளிலும் இருக்க வேண்டும்.+ 19 மூடியின் ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் இன்னொரு கேருபீனும் இருக்க வேண்டும். 20 அந்தக் கேருபீன்களின் இரண்டு சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருக்க வேண்டும்.+ அந்தக் கேருபீன்கள் எதிரெதிரே இருக்க வேண்டும். அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.
-