11பின்பு யெகோவா மோசேயிடம், “பார்வோனுக்கும் எகிப்துக்கும் இன்னுமொரு தண்டனை கொடுப்பேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவான்.+ சொல்லப்போனால், உங்களை இங்கிருந்து துரத்தியே விடுவான்.+
29 நடுராத்திரியில், எகிப்து தேசத்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் யெகோவா கொன்றுபோட்டார்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த பார்வோனுடைய மூத்த மகன்முதல் சிறைச்சாலையில் இருந்த கைதியின் மூத்த மகன்வரை எல்லாரையும் கொன்றுபோட்டார். மிருகங்களுடைய முதல் குட்டிகளையும் கொன்றுபோட்டார்.+
31 அந்த ராத்திரியே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டு,+ “புறப்பட்டுப் போங்கள். நீங்களும் மற்ற இஸ்ரவேலர்களும் என்னுடைய ஜனங்களின் நடுவிலிருந்து போய்விடுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, போய் யெகோவாவை வணங்குங்கள்.+