-
யாத்திராகமம் 10:8-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் மறுபடியும் கூப்பிட்டு, “போய் உங்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குங்கள். ஆனால், யாரெல்லாம் போகப்போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்” என்றான். 9 அதற்கு மோசே, “எங்களுடைய கடவுளான யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட+ நாங்கள் சிறியவர்களையும் பெரியவர்களையும் மகன்களையும் மகள்களையும் ஆடுகளையும் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்”+ என்றார்கள். 10 அப்போது அவன், “நான் மட்டும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அனுப்பிவிட்டேன் என்றால், யெகோவா உங்களோடு இருக்கிறார் என்று அர்த்தம்!+ நீங்கள் கண்டிப்பாக ஏதோ சூழ்ச்சி செய்கிறீர்கள். 11 எல்லாரையும் நான் அனுப்ப மாட்டேன்! யெகோவாவை வணங்குவதற்கு ஆண்களை மட்டும்தான் அனுப்புவேன். நீங்களும் அப்படித்தான் என்னிடம் கேட்டீர்கள்” என்று சொன்னான். உடனே அவர்கள் பார்வோன் முன்னாலிருந்து துரத்தப்பட்டார்கள்.
-