19 ஆனால், என்னுடைய கைபலத்தைக் காட்டினால்தான் எகிப்தின் ராஜா உங்களைப் போக விடுவான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.+20 அதனால், அதிர வைக்கும் அற்புதங்களைச் செய்து எகிப்தைத் தாக்குவேன். அதன் பின்பு, அவன் உங்களை அனுப்பிவிடுவான்.+
36 மோசேதான் அந்த மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்;+ அந்தத் தேசத்திலும் செங்கடலிலும்+ 40 வருஷங்கள் வனாந்தரத்திலும்+ நிறைய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.+