4 அவர்களை அனுப்பாமல் நீ பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தால், நாளைக்கு உன்னுடைய தேசத்துக்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன். 5 தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+