உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+ 2 நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன், உன்னை ஆசீர்வதித்து உன் பெயரைப் பிரபலமாக்குவேன். உன் மூலமாக எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்.+

  • ஆதியாகமம் 15:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார்.

  • ஆதியாகமம் 15:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அப்போது ஆபிராமைக் கடவுள் வெளியே கூட்டிக்கொண்டு வந்து, “தயவுசெய்து வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடிந்தால் எண்ணு” என்றார். பின்பு, “இப்படித்தான் உன் சந்ததியும் எண்ணற்றதாக ஆகும்”+ என்றார்.

  • ஆதியாகமம் 46:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அன்றைக்கு ராத்திரி கடவுள் ஒரு தரிசனத்தில், “யாக்கோபே, யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு யாக்கோபு, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 3 அப்போது அவர், “நான்தான் உண்மைக் கடவுள், நான்தான் உன்னுடைய அப்பாவின் கடவுள்.+ எகிப்துக்குப் போக நீ பயப்படாதே. ஏனென்றால், அங்கே நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்.+

  • யாத்திராகமம் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+

  • எண்ணாகமம் 2:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவரவருடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்ட இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். படையில் சேவை செய்வதற்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்