உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 9:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நான் உன்னையும் உன் ஜனங்களையும் கொடிய கொள்ளைநோயால் எப்போதோ தாக்கியிருப்பேன். நீயும் இந்தப் பூமியிலிருந்தே ஒழிந்துபோயிருப்பாய். 16 ஆனால், என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.+

  • யாத்திராகமம் 15:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+

      பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்?

      நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+

      பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.

  • யாத்திராகமம் 18:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு எத்திரோ, “உங்களை எகிப்தின் பிடியிலிருந்தும் பார்வோனின் பிடியிலிருந்தும் விடுதலை செய்த யெகோவா புகழப்படட்டும்! 11 அவருடைய ஜனங்களை ஆணவத்தோடு அடக்கி ஒடுக்கியவர்களை அவர் அழித்துவிட்டார்! யெகோவாதான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்+ என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்” என்றார்.

  • யோசுவா 2:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவள் அவர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார்+ என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.+ 10 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது உங்கள் முன்னால் செங்கடலை யெகோவா வற்றிப்போகச் செய்ததையும்,+ எமோரியர்களின் இரண்டு ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ யோர்தானின் கிழக்கே நீங்கள் அழித்துப்போட்டதையும் கேள்விப்பட்டோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்