24 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+
22 அதனால்தான், நீங்கள் மிகவும் உயர்ந்தவர்.+ உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுக்குச் சமமானவர் யாருமில்லை.+ உங்களைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ நாங்கள் எங்களுடைய காதால் கேட்ட எல்லாவற்றையும் வைத்து இதை ஆணித்தரமாக நம்புகிறோம்.