-
எண்ணாகமம் 21:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனார்கள். அப்போது, அவர்களோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக்+ தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+ 34 அப்போது யெகோவா மோசேயிடம், “அவனைப் பார்த்துப் பயப்படாதே.+ அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன்.+ எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்”+ என்று சொன்னார்.
-
-
உபாகமம் 3:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதன்படியே, பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் நம்முடைய கடவுளாகிய யெகோவா நம் கையில் கொடுத்தார். ஒருவர்விடாமல் எல்லாரையும் நாம் வெட்டி வீழ்த்தினோம்.
-
-
யோசுவா 9:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதற்கு அவர்கள், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயர்மேல் வைத்திருக்கிற மரியாதையால் ரொம்பத் தூரத்திலுள்ள ஒரு தேசத்திலிருந்து+ நாங்கள் வந்திருக்கிறோம். அவருடைய புகழையும் எகிப்தில் அவர் செய்த எல்லாவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.+ 10 யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த எமோரியர்களின் ராஜாக்களான எஸ்போனின் ராஜா சீகோனையும்+ அஸ்தரோத்தைச் சேர்ந்த பாசானின் ராஜா ஓகையும்+ நீங்கள் எப்படி வீழ்த்தினீர்கள் என்றுகூட கேள்விப்பட்டோம்.
-