5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.
22 ஆனால் அந்த நாளில், என் ஜனங்கள் வாழ்கிற கோசேன் பிரதேசத்தை மட்டும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன். அங்கு ஈக்களே வராது.+ அப்போது, யெகோவாவாகிய நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன் என்று நீ தெரிந்துகொள்வாய்.+