உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 17:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 இன்றைக்கு யெகோவா உன்னை என் கையில் கொடுப்பார்.+ நான் உன்னைக் கொல்வேன், உன் தலையை வெட்டுவேன். இன்று பெலிஸ்திய வீரர்களின் உடல்களை வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுவேன். அப்போது, இஸ்ரவேலின் கடவுள்தான் உண்மைக் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+

  • 1 ராஜாக்கள் 20:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு இஸ்ரவேலின் ராஜாவிடம் உண்மைக் கடவுளின் ஊழியர் வந்து, “‘யெகோவா மலைகளின் கடவுள்; சமவெளிகளின் கடவுள் அல்ல’ என்று சீரியர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த மாபெரும் படையைத் தோற்கடிக்க நான் உனக்கு உதவி செய்வேன்.+ அப்போது, நான் யெகோவா என்று நீ நிச்சயம் தெரிந்துகொள்வாய்+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.

  • 2 ராஜாக்கள் 19:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் மற்ற தேசங்களையும் அங்கிருந்த நகரங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்.+

  • 2 ராஜாக்கள் 19:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.+ அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்