-
யாத்திராகமம் 16:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 இஸ்ரவேலர்கள் அவர்களிடம் போய், “எகிப்து தேசத்தில் நாங்கள் இறைச்சியையும் ரொட்டியையும் திருப்தியாகச் சாப்பிட்டோமே, அப்போதே யெகோவாவின் கையால் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!+ எங்கள் எல்லாரையும் பட்டினிபோட்டு சாகடிப்பதற்காகத்தான் இந்த வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.+
-
-
எண்ணாகமம் 14:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ “நாம் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போனால்கூட பரவாயில்லை! 3 யெகோவா எதற்காக நம்மை அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் எதிரிகளின் வாளுக்குப் பலியாக்கப் பார்க்கிறார்?+ நம் மனைவிமக்களை அந்த ஜனங்கள் பிடித்து வைத்துக்கொள்வார்களே.+ எகிப்துக்குத் திரும்பிப் போவதுதான் நல்லது” என்றெல்லாம் முணுமுணுத்தார்கள்.+ 4 “நமக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போய்விடுவோம்” என்றுகூட பேசிக்கொண்டார்கள்.+
-
-
சங்கீதம் 106:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 எகிப்தில் நீங்கள் செய்த அற்புதங்களை எங்களுடைய முன்னோர்கள் உணரவில்லை.
-