-
எண்ணாகமம் 4:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 பலிபீடத்தில் சேவை செய்யப் பயன்படுத்தும் பாத்திரங்கள் எல்லாவற்றையும், அதாவது தணல் அள்ளும் கரண்டிகள், முள்கரண்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் போன்ற எல்லாவற்றையும்+ அதன்மேல் வைத்து கடல்நாய்த் தோல் விரிப்பால் மூட வேண்டும். பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.
15 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, பரிசுத்த இடத்துக்கான எல்லா பொருள்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் போர்த்திவைக்க வேண்டும்.+ அதன்பின், கோகாத்தியர்கள் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ ஆனால், பரிசுத்த இடத்துக்கான பொருள்களை அவர்கள் தொடக் கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் செத்துப்போவார்கள்.+ இவைதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்களாகும்.
-