-
லேவியராகமம் 8:14-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அடுத்ததாக, பாவப் பரிகார பலியைச் செலுத்த மோசே காளையைக் கொண்டுவந்தார். அந்தக் காளையின் தலையில் ஆரோனும் அவர் மகன்களும் கை வைத்தார்கள்.+ 15 மோசே அந்தக் காளையை வெட்டி, அதன் இரத்தத்தைத்+ தன் விரலில் தொட்டு, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் உள்ள கொம்புகளில் பூசி, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரித்தார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார். இப்படி, பலிகள் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைப் புனிதப்படுத்தினார். 16 பின்பு, குடல்கள் மேலுள்ள எல்லா கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+ 17 பிற்பாடு, அந்தக் காளையின் தோல், சதை, சாணம் ஆகியவற்றையும் மற்ற பாகங்களையும் முகாமுக்கு வெளியில் எரிக்கச் சொன்னார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
-