-
2 நாளாகமம் 26:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவர்கள் உசியா ராஜாவைத் தடுத்து, “உசியா, நீங்கள் யெகோவாவுக்குத் தூபம் காட்டுவது சரியில்லை! குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும்,+ அவர்கள்தான் ஆரோனின் வம்சத்தில் வந்தவர்கள்,+ அவர்கள்தான் இந்த வேலைக்காகப் புனிதப்படுத்தப்பட்டவர்கள். பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே போங்கள். நீங்கள் உண்மையில்லாமல் நடந்துகொண்டீர்கள். இப்படிச் செய்ததற்காக யெகோவா தேவனிடமிருந்து உங்களுக்கு எந்த மகிமையும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.
-
-
எசேக்கியேல் 8:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களில் 70 பேர் அவற்றுக்குமுன் நின்றுகொண்டிருந்தார்கள். சாப்பானின்+ மகனான யசினியாவும் அங்கு இருந்தான். ஒவ்வொருவரும் ஒரு தூபக்கரண்டியைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். தூபத்தின் புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது.+ 12 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்கள் ஒவ்வொருவரும் சிலைகளை வைத்திருக்கிற இருட்டான உள்ளறைகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தாயா? ‘யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை. யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார்’+ என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.
-