உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 33:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 என் மகிமை கடந்துபோகும்போது, உன்னை இந்தப் பாறையின் குகையில் வைப்பேன். நான் கடந்துபோகிற வரைக்கும் என் கையால் உன்னை மறைத்துப் பாதுகாப்பேன். 23 அதன்பின் என் கையை எடுத்துவிடுவேன், நீ என் பின்பக்கத்தைப் பார்ப்பாய். ஆனால், என் முகத்தைப் பார்க்க மாட்டாய்”+ என்றார்.

  • எண்ணாகமம் 12:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவனிடம் நான் நேருக்கு நேராகப் பேசுகிறேன்.+ மர்மமாகப் பேசாமல் தெளிவாகப் பேசுகிறேன். யெகோவாவாகிய நான் அவன் முன்னால் தோன்றுகிறேன். அப்படியிருக்கும்போது, என்னுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்றார்.

  • உபாகமம் 34:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவா மிக நன்றாக* தெரிந்து வைத்திருந்த+ மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருந்ததே இல்லை.+

  • யோவான் 1:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+

  • யோவான் 6:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 அதற்காக, தகப்பனை எந்த மனுஷனாவது பார்த்திருக்கிறான் என்று அர்த்தமாகாது,+ தகப்பனாகிய கடவுளிடமிருந்து வந்தவர் மட்டும்தான் அவரைப் பார்த்திருக்கிறார்.+

  • அப்போஸ்தலர் 7:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 வனாந்தரத்தில் மக்கள் ஒரு சபையாகக் கூடிவந்தபோது அவர்களோடு இருந்தவர் அவர்தான்; சீனாய் மலையில் பேசிய தேவதூதரோடும் நம்முடைய முன்னோர்களோடும் இருந்தவர் அவர்தான்.+ அழியாத பரிசுத்த வார்த்தைகளை நமக்குக் கொடுப்பதற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டவரும் அவர்தான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்