21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+
5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+