உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 6:23-27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் இஸ்ரவேலர்களை வாழ்த்தும்போது,+

      24 “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்,+ அவர் உங்களைப் பாதுகாக்கட்டும்.

      25 யெகோவா தன்னுடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து,+ உங்களுக்குக் கருணை காட்டட்டும்.

      26 யெகோவா உங்களைக் கரிசனையோடு பார்த்து,* உங்களுக்குச் சமாதானம் தரட்டும்”+ என்று சொல்லி வாழ்த்த வேண்டும்’”

      என்றார். 27 “அவர்கள் என் பெயரைச் சொல்லி இஸ்ரவேலர்களை வாழ்த்த வேண்டும்,+ நான் அவர்களுக்கு ஆசீர்வாதம் தருவேன்”+ என்றும் சொன்னார்.

  • உபாகமம் 10:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள்.

  • உபாகமம் 21:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் அவர் பெயரில் ஆசீர்வாதம் செய்வதற்கும்+ லேவியர்களான குருமார்களை யெகோவா தேர்ந்தெடுத்திருப்பதால் அவர்களும் அங்கு வர வேண்டும்.+ வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படித் தீர்க்க வேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள்.+

  • 1 நாளாகமம் 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அம்ராமின் மகன்கள்: ஆரோன்,+ மோசே.+ மகா பரிசுத்த அறையைப் புனிதமாக வைத்திருக்கும் பொறுப்பு ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது.+ அதோடு, யெகோவாவின் சன்னிதியில் பலிகளைச் செலுத்துவதும், அவருக்குச் சேவை செய்வதும், எப்போதும் கடவுளின் சார்பாக மக்களை ஆசீர்வதிப்பதும் இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்