உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 11:23-25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த மற்ற எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 24 அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 25 செத்துக் கிடக்கிற அவற்றை எடுத்துக்கொண்டு போகிற எவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.+ அவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.

  • லேவியராகமம் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஒழுக்கு நோயுள்ளவனின் எச்சில், தீட்டில்லாத ஒருவன்மேல் தெறித்தால் அவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.

  • லேவியராகமம் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேலர்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் சரி, தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டால்+ அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்,+ அதன்பின் சுத்தமாவான்.

  • லேவியராகமம் 22:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொழுநோய்+ இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய்+ இருந்தால் அந்தத் தீட்டு நீங்கும்வரை+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. அதேபோல், பிணத்தைத் தொட்ட ஒருவனைத் தொட்டுத் தீட்டுப்பட்டவனும்,+ விந்து வெளிப்பட்ட ஒருவனும்,+ 5 அசுத்தமான சிறு பிராணியைத் தொட்டவனும்,+ ஏதோவொரு காரணத்தால் தீட்டாகிவிட்ட ஒருவனைத் தொட்டவனும்+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. 6 இப்படிப்பட்ட ஒருவனையோ ஒன்றையோ தொட்டவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான். பரிசுத்த பொருள்களில் எதையும் அவன் சாப்பிடக் கூடாது. அவன் குளிக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்