-
லேவியராகமம் 9:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பின்பு, ஜனங்கள் தங்களுக்காகக் கொண்டுவந்த சமாதான பலியாகிய காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டினார். அவற்றின் இரத்தத்தை அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 19 ஆரோனின் மகன்கள் காளையின் கொழுப்புத் துண்டுகளையும்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பு நிறைந்த வாலையும், உள்ளுறுப்புகளின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து,+ 20 அந்த எல்லா கொழுப்பையும் மார்க்கண்டங்களின்* மேல் வைத்தார்கள். அதன்பின், அந்தக் கொழுப்புத் துண்டுகளைப் பலிபீடத்தின் மேல் அவர் எரித்தார்.+
-
-
2 நாளாகமம் 7:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இத்தனை தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ பலிகளின் கொழுப்பையும்+ கொடுப்பதற்கு சாலொமோன் செய்திருந்த செம்புப் பலிபீடத்தில்+ இடம் போதவில்லை. அதனால், தகன பலிகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும் கொடுப்பதற்கு, யெகோவாவுடைய ஆலயத்தின் முன்னாலிருந்த பிரகாரத்தின் நடுப்பகுதியை சாலொமோன் அன்றைக்குப் புனிதப்படுத்தினார்.
-