உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 4:8-10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளையின் கொழுப்பு முழுவதையும் அவர் எடுக்க வேண்டும். குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும், 9 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், எடுக்க வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுக்க வேண்டும்.+ 10 சமாதான பலிக்காகச் செலுத்தப்படுகிற காளையிலிருந்து அவற்றை எடுப்பது போலவே இந்தக் காளையிலிருந்தும் எடுக்க வேண்டும்.+ பின்பு, குருவானவர் தகன பலிக்கான பலிபீடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.

  • 1 ராஜாக்கள் 8:64-66
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 64 இத்தனை தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும் கொள்ள முடியாதளவுக்கு யெகோவாவின் சன்னிதியில் இருந்த செம்புப் பலிபீடம்+ சிறியதாக இருந்தது. அதனால், தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும்+ கொடுப்பதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் முன்னாலிருந்த பிரகாரத்தின் நடுப்பகுதியை ராஜா அன்றைக்குப் புனிதப்படுத்த வேண்டியிருந்தது. 65 லெபோ-காமாத்* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை* குடியிருந்த இஸ்ரவேல்+ சபையார் எல்லாரும் பெரிய கூட்டமாக அங்கே கூடிவந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சாலொமோன் ராஜா நம்முடைய கடவுளான யெகோவாவுக்கு முன்னால் மொத்தம் 14 நாட்கள் பண்டிகை கொண்டாடினார், அதாவது முதலில் 7 நாட்களும் அதைத் தொடர்ந்து 7 நாட்களும் கொண்டாடினார்.+ 66 அதற்கு அடுத்த நாள் மக்களை அனுப்பி வைத்தார். அவர்களும் ராஜாவை வாழ்த்திவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு மிகவும் சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள். யெகோவா தன்னுடைய ஊழியரான தாவீதுக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் செய்த எல்லா நன்மைகளையும்+ நினைத்து மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்