5 ஆனால், நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.+
நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.+
நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காகத்தான் அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.+
அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்.+
6 நாம் எல்லாரும் ஆடுகளைப் போல அலைந்து திரிந்தோம்.+
நமக்கு இஷ்டமான வழியில் போனோம்.
ஆனால், நம் எல்லாருடைய பாவங்களையும் அவர் சுமக்கும்படி யெகோவா செய்தார்.+