உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 3:3-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 5 ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+

  • லேவியராகமம் 7:29-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்துகிறவன் அதில் ஒரு பங்கை யெகோவாவுக்கென்று கொண்டுவர வேண்டும்.+ 30 யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 31 குருவானவர் அதன் கொழுப்பைப் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ ஆனால், மார்க்கண்டம் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சொந்தமாகும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்