3 நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தின் ஜனங்களைப் போல நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது. நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போலவும் நடந்துகொள்ளக் கூடாது.+ அவர்களுடைய சட்டதிட்டங்களை* பின்பற்றக் கூடாது.
23 நான் உங்களைவிட்டு விரட்டியடிக்கிற ஜனங்களின் சட்டதிட்டங்களை* நீங்கள் பின்பற்றக் கூடாது.+ இப்படிப்பட்ட எல்லா செயல்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களை நான் அருவருக்கிறேன்.+