-
லேவியராகமம் 11:46, 47பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
46 மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், தண்ணீரில் வாழும் உயிரினங்கள், பூமியில் ஊர்ந்து போகும் உயிரினங்கள் ஆகியவற்றைக் குறித்த சட்டங்கள் இவைதான். 47 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், நீங்கள் சாப்பிடக்கூடிய உயிரினங்களுக்கும் சாப்பிடக்கூடாத உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதற்காகவே இந்தச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறேன்’”+ என்றார்.
-
-
உபாகமம் 14:4-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ஆனால் காளை, செம்மறியாடு, வெள்ளாடு, 5 சிவப்பு மான், நவ்வி மான், ரோ மான், காட்டு வெள்ளாடு, கலைமான், காட்டுச் செம்மறியாடு, வரையாடு ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம்.+ 6 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, அசைபோடுகிற எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம். 7 இருந்தாலும், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது குளம்புகள் பிளவுபட்டிருக்கிற மிருகங்களில் ஒட்டகம், காட்டு முயல், கற்பாறை முயல்* ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இவை அசைபோடும், ஆனால் இவற்றின் குளம்புகள் பிளவுபட்டிருக்காது. இவை உங்களுக்கு அசுத்தமானவை.+ 8 பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.
9 தண்ணீரில் வாழும் உயிரினங்களில், துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், துடுப்புகளும் செதில்களும் இல்லாத எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. அது உங்களுக்கு அசுத்தமானது.
11 பறவைகளில் சுத்தமான எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம். 12 ஆனால் கழுகு, கடல் பருந்து, கறுப்பு ராஜாளி,+ 13 சிவப்புப் பருந்து, கறுப்புப் பருந்து, எல்லா வகையான கூளிப் பருந்து, 14 எல்லா வகையான அண்டங்காக்கை, 15 நெருப்புக்கோழி, ஆந்தை, கடல் புறா, எல்லா வகையான வல்லூறு, 16 சிறு ஆந்தை, நெட்டைக்காது ஆந்தை, அன்னம், 17 கூழைக்கடா, ராஜாளி, நீர்க்காகம், 18 நாரை, எல்லா வகையான கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால் ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. 19 ஊர்ந்து போகிற, சிறகுள்ள பூச்சிகள் எல்லாமே உங்களுக்கு அசுத்தமானது. அவற்றைச் சாப்பிடக் கூடாது. 20 பறக்கும் உயிரினங்களில் சுத்தமான எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.
-