-
யாத்திராகமம் 27:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 பின்பு அவர், “வேல மரத்தால் ஒரு பலிபீடத்தை நீ செய்ய வேண்டும்.+ அதன் நீளம் ஐந்து முழமும்,* அகலம் ஐந்து முழமும், உயரம் மூன்று முழமுமாக இருக்க வேண்டும். அது சதுரமாக இருக்க வேண்டும்.+ 2 அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள்+ வைக்க வேண்டும். அந்தக் கொம்புகள் பலிபீடத்துடன் இணைந்தபடி இருக்க வேண்டும். பலிபீடத்துக்கு செம்பினால் தகடு அடிக்க வேண்டும்.+
-
-
யாத்திராகமம் 30:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு அவர், “தூபப்பொருளை எரிப்பதற்காக+ நீ வேல மரத்தால் ஒரு பீடம் செய்.+ 2 அது சதுரமாக இருக்க வேண்டும். அதன் நீளம் ஒரு முழமாகவும்,* அகலம் ஒரு முழமாகவும், உயரம் இரண்டு முழமாகவும் இருக்க வேண்டும். அதன் கொம்புகள் அதனோடு இணைந்திருக்க வேண்டும்.+ 3 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடி. அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்.
-