உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 27:1-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யோசேப்பின் மகன் மனாசே, மனாசேயின் மகன் மாகீர், மாகீரின் மகன் கீலேயாத், கீலேயாத்தின் மகன் ஹேப்பேர், ஹேப்பேரின் மகன் செலோப்பியாத்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 2 இந்தப் பெண்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாசலுக்கு வந்து, மோசேக்கும் குருவாகிய எலெயாசாருக்கும் தலைவர்களுக்கும்+ ஜனங்களுக்கும் முன்னால் நின்று, 3 “எங்களுடைய அப்பா வனாந்தரத்தில் செத்துப்போனார், ஆனால் யெகோவாவுக்கு அடங்கி நடக்காத கோராகுவின் கும்பலோடு+ சேர்ந்ததால் அவர் சாகவில்லை, தன்னுடைய பாவத்தினால்தான் செத்துப்போனார். அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. 4 எங்களுடைய அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதற்காக அவருடைய பெயர் ஏன் அவருடைய வம்சத்திலிருந்து மறைந்துபோக வேண்டும்? எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள்” என்றார்கள். 5 உடனே மோசே அவர்களுடைய வழக்கை யெகோவாவிடம் சொன்னார்.+

      6 அப்போது யெகோவா மோசேயிடம், 7 “செலோப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரிதான். நீ அவர்களுடைய அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு அவர்களுக்கும் கண்டிப்பாகச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். அவர்களுடைய அப்பாவின் சொத்தை அவர்களுடைய பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்