2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+
4 நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே.+ ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது.+ நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.+