-
யாத்திராகமம் 4:14-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதனால், யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் மோசேயிடம், “உனக்குத்தான் லேவியனாகிய உன் அண்ணன் ஆரோன்+ இருக்கிறானே. அவன் நன்றாகப் பேசுவான் என்று எனக்குத் தெரியும். உன்னைப் பார்க்க அவன் வந்துகொண்டிருக்கிறான். உன்னைப் பார்க்கும்போது அவன் சந்தோஷப்படுவான்.+ 15 நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீ அவனிடம் சொல்ல வேண்டும்.+ நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், அவனோடும் இருப்பேன்.+ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுப்பேன். 16 அவன் உன்னுடைய சார்பில் ஜனங்களிடம் பேசுவான், நீ கடவுளுடைய சார்பில் அவனிடம் பேசுவாய்.*+
-
-
யாத்திராகமம் 15:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஆரோனின் சகோதரியும் தீர்க்கதரிசனம் சொல்கிறவளுமான மிரியாம் கஞ்சிராவைக் கையில் எடுத்துக்கொண்டாள். மற்ற எல்லா பெண்களும்கூட கஞ்சிராவை எடுத்துக்கொண்டு அவளுக்குப் பின்னால் போய் நடனம் ஆடினார்கள்.
-