-
உபாகமம் 33:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
“கடவுளே, உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவனிடம்+ உங்களுடைய தும்மீமையும், ஊரீமையும் கொடுத்தீர்கள்.+
அவனை மாசாவில் சோதித்துப் பார்த்தீர்கள்.+
மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவனோடு வழக்காடினீர்கள்.+
-
எஸ்றா 2:62, 63பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
62 இவர்கள் எல்லாரும் தங்களுடைய வம்சாவளியை உறுதிசெய்ய பதிவேடுகளைத் தேடினார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் குருமார்களாகச் சேவை செய்யும் தகுதியை இழந்தார்கள்.+ 63 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும் வைத்து கடவுளை விசாரிக்கும்வரை+ மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள்+ எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று ஆளுநர்* சொல்லிவிட்டார்.
-
-
-