-
ஆதியாகமம் 46:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அன்றைக்கு ராத்திரி கடவுள் ஒரு தரிசனத்தில், “யாக்கோபே, யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு யாக்கோபு, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார்.
-
-
யாத்திராகமம் 24:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் பெரியோர்கள் 70 பேரும் மலைமேல் ஏறிப்போய், 10 இஸ்ரவேலின் கடவுளைப் பார்த்தார்கள்.*+ அவருடைய பாதத்தின் கீழே நீலமணிக் கல் பதிக்கப்பட்ட தரையைப் போல ஒன்று தெரிந்தது. அது தெள்ளத்தெளிவான வானத்தைப் போல இருந்தது.+ 11 இஸ்ரவேலின் முக்கியத் தலைவர்களான+ அவர்களை உண்மைக் கடவுள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அவருடைய தரிசனத்தைப் பார்த்தார்கள், சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.
-