12 கூஷ் தேசத்துப் பெண்ணை மோசே கல்யாணம் செய்திருந்ததால்+ மிரியாமும் ஆரோனும் அவருக்கு விரோதமாக முணுமுணுத்தார்கள். 2 “மோசே மூலம்தான் யெகோவா பேசினாரா? ஏன், எங்கள் மூலம் பேசவில்லையா?”+ என்றும் முணுமுணுத்தார்கள். இதையெல்லாம் யெகோவா கேட்டுக்கொண்டிருந்தார்.+