-
உபாகமம் 2:30-35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 ஆனால், எஸ்போனின் ராஜாவான சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக நமக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நம் கடவுளாகிய யெகோவா விட்டுவிட்டார்.+ அவனை நம் கையில் கொடுப்பதற்காகத்தான் அப்படிப் பிடிவாதமாக இருக்கும்படி அவனை விட்டுவிட்டார். அதன்படியே, அவன் நம் கையில் கொடுக்கப்பட்டான்.+
31 அப்போது யெகோவா என்னிடம், ‘இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உங்கள் கையில் தந்திருக்கிறேன். நீங்கள் போய் அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’+ என்று சொன்னார். 32 நம்மோடு போர் செய்வதற்காக சீகோன் தன் ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு யாகாசுக்கு வந்தபோது,+ 33 நம் கடவுளாகிய யெகோவா அவனை நம் கையில் கொடுத்தார். அவனையும் அவன் மகன்களையும் அவனுடைய எல்லா ஆட்களையும் நாம் தோற்கடித்தோம். 34 அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றி அழித்தோம். அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் ஒருவர்விடாமல் கொன்றுபோட்டோம்.+ 35 அந்த நகரங்களில் கைப்பற்றிய பொருள்களையும் ஆடுமாடுகளையும் மட்டும் நமக்காக வைத்துக்கொண்டோம்.
-
-
நியாயாதிபதிகள் 11:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 பின்பு எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடம், அதாவது எஸ்போனின் ராஜாவிடம், இஸ்ரவேலர்கள் தங்கள் தூதுவர்களை அனுப்பி, “உங்களுடைய தேசம் வழியாக எங்களுடைய இடத்துக்குப் போய்ச் சேர தயவுசெய்து அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்கள்.+ 20 ஆனால் சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய தேசத்தைக் கடந்துபோக அவர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய படையைத் திரட்டி, யாகாசில் முகாம்போட்டு, இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+
-