17 ஆனால், அந்த நியாயாதிபதிகளின் பேச்சையும் அவர்கள் கேட்கவில்லை. மற்ற தெய்வங்களை வணங்கி யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த முன்னோர்களின் வழியைவிட்டு சீக்கிரமாக விலகிப்போனார்கள்.+ அந்த முன்னோர்களைப் போல அவர்கள் நடக்கவில்லை.