உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 12:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அப்படி வணங்கக் கூடாது. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும்போது யெகோவா அருவருக்கிற எல்லாவற்றையும் செய்கிறார்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும்கூட அந்தத் தெய்வங்களுக்காக நெருப்பில் பலி கொடுக்கிறார்கள்.+

  • 2 ராஜாக்கள் 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ரெமலியாவின் மகன் பெக்கா ஆட்சி செய்த 17-ஆம் வருஷத்தில், யோதாம் ராஜாவின் மகன் ஆகாஸ்+ யூதாவில் ராஜாவானார்.

  • 2 ராஜாக்கள் 16:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ தன்னுடைய சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+

  • 2 ராஜாக்கள் 17:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 தங்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்,*+ குறி கேட்டார்கள்,+ சகுனம் பார்த்தார்கள், யெகோவாவைப் புண்படுத்துவதற்காக அவர் வெறுக்கிற காரியங்களை வேண்டுமென்றே செய்துவந்தார்கள்.

      18 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவா பயங்கர கோபமடைந்தார், அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே நீக்கிவிட்டார்.+ யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.

  • எரேமியா 7:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 ‘யூதா ஜனங்கள் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று யெகோவா சொல்கிறார். ‘என்னுடைய பெயர் தாங்கிய ஆலயத்திலே அருவருப்பான சிலைகளை வைத்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ 31 பென்-இன்னோம்*+ பள்ளத்தாக்கில்* இருக்கிற தோப்பேத்தில்* ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ அப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. அந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’+

  • 1 கொரிந்தியர் 10:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்