-
உபாகமம் 18:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+ 11 வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம்+ அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ,+ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.+ 12 ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார்.
-
-
எரேமியா 32:35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 அது போதாதென்று, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்*+ பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே மோளேகு தெய்வத்துக்கு அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்.*+ இப்படிப்பட்ட அருவருப்பான பாவச் செயலைச் செய்யும்படி நான் யூதாவுக்குக் கட்டளை கொடுக்கவே இல்லை.+ இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’
-