உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 28:7-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 கடைசியில், சவுல் தன்னுடைய ஊழியர்களிடம், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.+ நான் அவளிடம் போய் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்” என்றார். அதற்கு அவர்கள், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண் எந்தோரில்+ இருக்கிறாள்” என்று சொன்னார்கள்.

      8 அதனால், சவுல் அந்தப் பெண்ணைப் பார்க்க மாறுவேடத்தில் இரண்டு ஆட்களோடு ராத்திரியில் போனார். அவர் அவளிடம், “உன்னுடைய மந்திர சக்தியால் ஆவியுலகத்தோடு தொடர்புகொண்டு+ நான் சொல்கிற ஆளைத் தயவுசெய்து கூப்பிடு” என்றார். 9 ஆனால் அவள், “ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் தேசத்திலிருந்து சவுல் துரத்தியடித்த விஷயம்+ உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தும், என் உயிருக்கு உலை வைக்கப் பார்க்கிறீர்களா?”+ என்று கேட்டாள். 10 அப்போது சவுல், “உனக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது, இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை”* என்று சொல்லி, யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்து கொடுத்தார். 11 அந்தப் பெண், “உங்களுக்காக நான் யாரைக் கூப்பிட வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு சவுல், “சாமுவேலைக் கூப்பிடு” என்றார்.

  • ஏசாயா 8:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அவர்கள் உங்களிடம், “ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் அல்லது குறிசொல்கிறவர்களிடம் போய் விசாரியுங்கள், அவர்கள் முணுமுணுப்பதையும் கிசுகிசுப்பதையும் கேளுங்கள்” என்று சொல்வார்கள். ஆனால், அந்த ஜனங்கள் தங்களுடைய கடவுளிடம்தானே விசாரிக்க வேண்டும்? உயிரோடு இருக்கிறவர்களுக்காகச் செத்தவர்களிடம் விசாரிப்பது சரியா?+

  • கலாத்தியர் 5:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு,*+ அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை,*+ 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு,

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்