17 அப்போது அவருடைய மாமனார், “நீ இப்படிச் செய்வது சரியல்ல. 18 இது ரொம்பவும் பெரிய பொறுப்பு. நீ ஒருவனே இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நீயும் களைத்துப்போவாய், இந்த ஜனங்களும் களைத்துப்போவார்கள்.
11 பின்பு மோசே யெகோவாவிடம், “உங்கள் ஊழியனாகிய என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு என்மேல் கருணையே இல்லையா? இந்த எல்லா ஜனங்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என்மேல் சுமத்திவிட்டீர்களே.+