உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 32:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள்*+ என்று எனக்குத் தெரியும். 10 இவர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, இவர்களை அடியோடு அழிக்கலாம் என்றிருக்கிறேன். அதேசமயத்தில், உன் மூலமாக ஒரு மாபெரும் தேசத்தை உருவாக்கப்போகிறேன்”+ என்றார்.

  • எண்ணாகமம் 25:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

  • உபாகமம் 11:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 மற்ற தெய்வங்களை வணங்க வேண்டுமென்ற தவறான ஆசை உங்கள் இதயத்தில் வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அந்தத் தவறான வழியில் போகாதபடி கவனமாக இருங்கள்.+ 17 அப்படிப் போனால், யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். மழை பெய்யாதபடி அவர் வானத்தை அடைத்துவிடுவார்,+ நிலமும் விளைச்சல் தராது. யெகோவா கொடுக்கிற நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.+

  • நியாயாதிபதிகள் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்