27 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே உங்கள் எதிரிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நடுநடுங்கும்படி செய்வேன்.+ உங்களோடு மோதுகிற எல்லாரையும் நான் குழப்புவேன். உங்கள் எதிரிகள் எல்லாரும் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்வேன்.+
8 இதோ, அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுடைய முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்+ யாக்கோபுக்கும்+ அவர்களுடைய சந்ததிக்கும்+ தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.