உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன்.+ நிலம் விளைச்சல் தரும்,+ மரம் கனி கொடுக்கும்.

  • உபாகமம் 8:7-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நல்ல தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.+ அங்கே சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும் நீரோடைகள் பாய்ந்தோடுகின்றன, நீரூற்றுகள் பொங்கியெழுகின்றன. 8 அங்கே கோதுமையும், பார்லியும், திராட்சைக் கொடிகளும், அத்தி மரங்களும், மாதுளைச் செடிகளும்,+ ஒலிவ எண்ணெயும், தேனும்+ ஏராளமாக இருக்கின்றன. 9 உணவுப் பொருள்களுக்குப் பஞ்சமே இல்லாத தேசம் அது. அங்கே உங்களுக்கு எதற்குமே குறைவு இருக்காது. அங்கே உள்ள பாறைகளிலிருந்து இரும்பும் மலைகளிலிருந்து செம்பும் கிடைக்கும்.

  • உபாகமம் 28:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நிரம்பி வழியும் களஞ்சியமாகிய வானத்தை யெகோவா திறந்து, உங்கள் தேசத்தில் பருவ மழையைப் பொழிய வைப்பார்,+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+

  • எரேமியா 14:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 வானம் தானாகவே மழையைப் பொழியுமா?

      அல்லது, உலகத்திலுள்ள வீணான தெய்வங்களால் மழை தர முடியுமா?

      எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களால் மட்டும்தானே அதைச் செய்ய முடியும்?+

      நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்.

      உங்களால் மட்டும்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்