24 ஆனால், என் ஊழியனாகிய காலேப்+ இவர்களைப் போல் நடந்துகொள்ளாமல், முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான். அதனால், அவன் உளவு பார்த்த தேசத்துக்கு அவனை நான் நிச்சயம் கூட்டிக்கொண்டு போவேன், அவனுடைய வம்சத்தார் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
9 அன்றைக்கு மோசே என்னிடம், ‘நீ என் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் உன் காலடி பட்ட நிலம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தர சொத்தாகக் கொடுக்கப்படும்’+ என்று சத்தியம் செய்தார்.