3 அதன்பின் மோசே ஜனங்களிடம், “எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து* விடுதலையான இந்த நாளை நீங்கள் நினைவில் வையுங்கள்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.+ அதனால், புளிப்பு சேர்க்கப்பட்ட எதையுமே நீங்கள் சாப்பிடக் கூடாது.
8 அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.