-
உபாகமம் 21:6-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அந்த உடல் கிடக்கிற இடத்துக்கு மிகவும் பக்கத்திலுள்ள நகரத்தின் பெரியோர்கள் எல்லாரும், பள்ளத்தாக்கில் வெட்டப்பட்ட அந்த இளம் பசுவின் மேல் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.+ 7 பின்பு அவர்கள், ‘நாங்கள் இவனைக் கொலை செய்யவில்லை, இவன் கொலை செய்யப்பட்டதை நாங்கள் பார்க்கவும் இல்லை. 8 யெகோவாவே, நீங்கள் விடுவித்த+ உங்களுடைய இஸ்ரவேல் ஜனங்களைக் குற்றப்படுத்தாதீர்கள். இந்த அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை உங்களுடைய ஜனங்கள்மேல் சுமத்தாதீர்கள்’+ என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்தக் கொலைப்பழி* அவர்கள்மேல் வராது. 9 இப்படி, நீங்கள் யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்தால் அந்த அப்பாவி மனுஷனின் கொலைப்பழியைச் சுமக்காமல் இருப்பீர்கள்.
-