உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் சொல்லும் இந்த வார்த்தைகளை யாரும் மறக்காமல் இருப்பதற்காக* ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து, யோசுவாவுக்கு வாசித்துக் காட்டு: ‘அமலேக்கியர்கள் பற்றிய நினைவையே இந்த உலகத்திலிருந்து நான் அடியோடு அழித்துவிடுவேன்’”+ என்றார்.

  • 1 சாமுவேல் 14:47, 48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 சவுல் இஸ்ரவேல் தேசம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சுற்றிலும் இருந்த எதிரிகளான மோவாபியர்களோடும்,+ அம்மோனியர்களோடும்,+ ஏதோமியர்களோடும்,+ சோபாவின்+ ராஜாக்களோடும், பெலிஸ்தியர்களோடும்+ போர் செய்தார். படையெடுத்துப் போன எல்லா இடங்களிலும் அவர்களைத் தோற்கடித்தார். 48 அவர் வீரத்தோடு போர் செய்து அமலேக்கியர்களை+ ஜெயித்தார். சூறையாடுகிறவர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.

  • 1 சாமுவேல் 15:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு சாமுவேல் சவுலிடம், “யெகோவா என்னை அனுப்பி உன்னை இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்,+ இல்லையா? இப்போது, யெகோவா சொல்வதைக் கேள்.+ 2 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களோடு போர் செய்த அமலேக்கியர்களை நான் பழிவாங்கப்போகிறேன்.+ 3 இப்போது நீ போய் அமலேக்கியர்களை வெட்டித்தள்ளு.+ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என எல்லாரையும் கொன்றுபோடு.*+ அவர்களுக்குச் சொந்தமான ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், மற்ற எல்லாவற்றையும் அழித்துவிடு’”+ என்று சொன்னார்.

  • 1 நாளாகமம் 4:42, 43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 சிமியோனியர்களில் சிலர், அதாவது 500 பேர், இஷியின் மகன்களாகிய பெலத்தியா, நெயாரியா, ரெபாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையில் சேயீர் மலைப்பகுதிக்குப்+ போனார்கள். 43 அங்கே தப்பித்து வந்திருந்த அமலேக்கியர்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்;+ இந்நாள்வரை அங்கே வாழ்ந்துவருகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்