உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமலும் போனால்,+ இந்த எல்லா சாபங்களும்+ கண்டிப்பாக உங்கள்மேல் வந்து குவியும். நீங்கள் அழியும்வரை+ அவை உங்களைப் பின்தொடரும், உங்களைவிட்டுப் போகவே போகாது.

  • உபாகமம் 28:63
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 63 உங்களை ஏராளமாகப் பெருக வைப்பதிலும் சீரும் சிறப்புமாக வாழ வைப்பதிலும் ஒருசமயம் சந்தோஷப்பட்ட யெகோவா, இப்போது உங்களை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் சந்தோஷப்படுவார். நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை வேரோடு பிடுங்கி எறிவார்.

  • 1 ராஜாக்கள் 14:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவா இஸ்ரவேலர்களைத் தண்டிப்பார், தண்ணீரில் அலைக்கழிக்கப்படும் நாணற்புல் போலாக்குவார். அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த இந்த அருமையான தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப்போடுவார்.+ ஆற்றுக்கு* அப்பால் அவர்களைச் சிதறிப்போகச் செய்வார்.+ ஏனென்றால், அவர்கள் பூஜைக் கம்பங்களை*+ செய்து யெகோவாவைப் புண்படுத்தினார்கள்.

  • 2 ராஜாக்கள் 17:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவா பயங்கர கோபமடைந்தார், அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே நீக்கிவிட்டார்.+ யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.

  • லூக்கா 21:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அப்போது, அவர்கள் வாள் முனையில் வீழ்த்தப்படுவார்கள், சிறைபிடிக்கப்பட்டு மற்ற தேசங்களுக்குக் கொண்டுபோகப்படுவார்கள்.+ மற்ற தேசத்தாருக்கு* குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் மற்ற தேசத்தாரால்* மிதிக்கப்படும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்